பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட சூறாவளி – 140 பேர் பலி; தேசிய பேரிடராக அறிவிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” சூறாவளி புயலால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் அதிபர் பொர்டினாண்ட் “பொங்க்பொங்” மார்கோஸ் ஜூனியர் (Ferdinand “Bongbong” Marcos Jr.) நாடு முழுவதும் தேசிய பேரிடர் நிலை அறிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளை கடுமையாக தாக்கிய இந்த புயல் பல்வேறு நகரங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புயல் தாக்கத்தின் போது கார்கள், வீடுகள், மற்றும் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Adsterra Native Banner







