
கேப்டன் பிரபாகரன் படம் வந்து என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப நெருக்கமான படம். கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி ராஜா தியேட்டரில் இருந்து 100 நாள் ஓடுடியது. அந்த 100 நாள்ல வந்து ஒரு கண்டினியூவா ஒரு 10 நாள் அடுத்தடுத்த ஷோ அப்படியே பார்த்துட்டே இருந்தேன். இந்த படம் வந்து எனக்கு ஏன் இவ்வளவு நெருக்கம்ன்னு சொன்னா நான் நிறைய விஷயம் சினிமால வந்து இந்த படத்துல இருந்து கத்துக்கிட்டேன்.
ஸ்கிரீன் பிளே எப்படி இருக்கணும் அப்படிங்கறது நம்ம வந்து படம் பாத்தீங்கன்னா ரெண்டு சாங் ரெண்டு சாங்குமே ஹீரோக்கு கிடையாது. எவ்வளவு புதுசு பாருங்க ரெண்டே ரெண்டு பாட்டுதான்அதுவே புதுசு அந்த டைம்ல.
அந்த ரெண்டு பாட்டுமே ஹீரோக்கு கிடையாதுன்னா அது எந்த ஹீரோ ஒத்துக்குவாங்க அதுவும் ஒரு அவ்வளவு பெரிய ஹிட் அங்க கேட்ட உடனே ஐயோ நான் பாடுறேன் ஏதாவது சொல்லுவாங்கல்ல .
அது வந்து ரொம்ப புதுசா இருந்தது. அதே மாதிரி படம் ஆரம்பிச்சு ஒரு 19 நிமிஷத்துல வந்து ஹீரோவே இருக்க மாட்டாரு. ஹீரோ இல்லாம ஒரு சாங் ஒரு பைட் இருக்கும்.
இது எப்படி சாத்தியமாச்சுன்னு எனக்கு தோணுது ஆச்சரியமா இருந்தது. அதனாலதான் என்னுடைய படங்களல பார்த்தீங்கன்னா கரெக்டா என்ன கேரக்டர் பில்ட் பன்னாலும் அந்த 19வது நிமிஷத்துல கதைக்கு வந்துருவேன்.
நம்ம வந்து துப்பாக்கில எடுத்துக்கிட்டீங்கன்னா அந்த பஸ் பிளாஸ்ட்ல இருந்து கதை ஆரம்பிச்சிரும். அது கரெக்டா கேப்டன் பரனோட இன்ஸ்பிரேஷன்ல தான் அந்த பபர்ஸ்ட் 20 மினிட்ஸ் இருந்தது.
அதே மாதிரி ஒரு ஆக்ஷன்பிலிம்ல வில்லன் இறந்துட்ட பிறகு படம் இருக்காது. வில்லன் தான் ஹீரோவோட எனிமி அவன்தான் கதை வில்லன் இறந்துட்ட பிறகு படம் இருக்கவே இருக்காது ஆனா வில்லன் இறந்ததுக்கு அப்புறம் 10 நிமிஷம் படம் ஓடும்.
அதுதான் எனக்கு திருப்பி ரமணால இன்ஸ்பிரேஷன் ஆச்சு ரமணால வில்லன் இறந்த பிறகு திருப்பி 10 நிமிஷம் இருந்துச்சு ஏன்னா பாப்பாங்க அப்படின்ற ஒரு நம்பிக்கை வந்து எனக்கு அந்த படம் கொடுத்தது அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் ஒரு ஆச்சரியமான ஒரு பிரமிப்பா அந்த படம் கொடுத்துச்சு
அந்த படத்துல வந்து லியாகத் அலிகான் சாரோட வசனம் ஆகட்டும் நான் ஒரு ஷோல வந்து லிட்ரலா என்ன எண்ணுனேன் 36 இடத்துல கிளாப்ஸ் டயலாக் மட்டுமே இருந்துச்சு. சோ அப்படிப்பட்ட ஒரு அற்புதமான படம்.
அந்த படத்தை பன்னிட்டதுக்கு அப்புறம் அதே கேப்டன வச்சு நான் ஒரு டைரக்ட் பண்ணுவேன் அப்படின்றதும் எனக்கு ஒரு கனவா இருந்தது. அதே மாதிரி என்னுடைய திருமணத்தை அவர் நடத்தி வச்சாருன்னு நினைக்கும்போது அதுவும் எனக்கு ஆச்சரியமா இருக்கு.
இன்னைக்கு நான் ஊர்ல சினிமாவுக்கே வராத ஒரு ரசிகனா அவரோட கேப்டன் பிரபாகரன வந்து பிரண்ட் ரோல்ல உட்காந்து பார்த்த ஒரு ரசிகன் வந்து இன்னைக்கு ரீரிலீஸ்ல வந்து அந்த டைரக்டரோட பக்கத்துல உட்காந்துருக்கேன்னும்போது எனக்கு இதுவே கனவு மாதிரிதான் இருக்கு.
ரொம்ப நன்றி சார் எங்களை எல்லாம் கூப்பிட்டது இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்துருக்கீங்க கண்டிப்பா இந்த ஜெனரேஷன் ஆடியன்ஸ் வந்து ஒரு படத்தை பாருங்க எப்படி அந்த பிரம்மாண்டத்தை கொண்டு வந்திருக்காரு தமிழில் வந்து ஒரு இங்கிலீஷ் படம் மாதிரி அந்த டைமுக்கு அந்த ட்ரெயின்ல ஒரு ஃபைட் ஒரு ஷாட் மட்டும் வந்திருக்கும் .
அத பாத்தீங்கன்னாவே உங்களுக்கு அவ்வளவு ஆச்சரியமா இருக்கும். ஆக்சன் சீக்குவன்ஸ் எல்லாம் பிரமாதமா இருக்கும். அந்த 20 மினிட்ஸ் பில்ட்ப் பண்ணி அந்த ஹீரோ வந்து அந்த போலீஸ் ஸ்டேஷன் பைட்டுக்கு முன்னாடி ஒரு ரோடுல அடிச்சு அங்க இருந்து போய் போலீஸ் ஸ்டேஷன்ல இது பண்ணுவாங்க.
அந்த பைட்டுக்கு மட்டுமே தியேட்டர் பிளாஸ்டா இருக்கும். இந்த தடவை பாருங்க இந்த படத்தை ரொம்ப உங்களுக்கு பிடிக்கும். என்னை வாழ்த்த அழைத்த அனைவருக்கும் நன்றி.
தேங்க்யூ சார். விஜய பிரபாகரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பிரபா நீங்களும் அந்த கேப்டன் பெயரை போல் புகழ் உச்சியை அடைய வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.




