
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி சமந்தா ரசிகர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது. டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் இப்போதும் கலக்கி வருபவர் நாகார்ஜுனா.
இவரது மூத்த மகனும் நடிகருமான நாக சைதன்யா. தமிழில் டாப் ஹீரோயினாக திகழ்ந்து வரும் சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து ஏ மாயா சேசாவா, ஆட்டோநகர் சூர்யா, மனம், மஜிலி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சினிமா வட்டாரத்திலேயே மிகவும் கியூட்டான ஜோடி என பெயரும் பெற்றனர்.
திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார். அதற்கு நாக சைதன்யாவும் சப்போர்ட்டாகத்தான் இருந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. இரண்டு பேருக்கும் நடுவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இறுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இப்போதும் கூட அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கு பலரும் பல கதைகளை சொல்லி வருகிறார்கள்.
சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாகசைதன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதல் திருமண முறிவால் மன உளைச்சலில் இருந்த தனது மகனின் வாழ்க்கையை சரி செய்ய இந்த புதிய காதல் உதவும் என நம்பிய நாகார்ஜுனா உடனடியாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அதன்படி கடந்த 2024ஆம் ஆண்டு நாகசைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. ஆனால் இதற்கு சமந்தாவின் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். இந்நிலையில் தான் நாக சைதன்யா தனது மனைவி சோபிதா குறித்து பேசியது சமந்தா ரசிகர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் எனது மனைவி சோபிதா துலிபாலா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. சோபிதாவுக்கும் எனக்குமான காதல் இன்ஸ்டாகிராமில் தான் தொடங்கியது. எனது இன்ஸ்டா பதிவு ஒன்றுக்கு அவர் பதில்ளித்திருந்தார். அப்போது இருந்து நாங்கள் பேச ஆரம்பித்துக் கொண்டோம். அது பின் நாட்களில் காதலாக மாறியது என்றார்.
இதில் மிகவும் கோபமடைந்துள்ள சமந்தா ஃபேன்ஸ் இது போன்றுதான் சமந்தாவை திருமணம் செய்திருந்த போதும் ஏகப்பட்ட விஷயங்களை அவர் பேசினார். ஆனால் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அவரால்தான் சமந்தாவின் கரியரே போய்விட்டது என்று கமெண்ட் செய்து தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சமந்தா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவரும் இயக்குனர் ராஜுவும் டேட்டிங் செய்து வருவதாக சில தகவல்கள் அவ்வப்போது பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்றுதான் தெரியவில்லை.






