
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டின என்பதைக் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இளையராஜா தொடர்ந்த வழக்கில், சோனி நிறுவனத்துக்கு வருமான விவரங்களுடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டதாவது, “டியூட்” (Dude)என்ற திரைப்படத்தில் தன்னுடைய இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், அந்த பாடல்களையும் உட்பட பல படைப்புகள் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகும்.
இதனைத் தொடர்ந்து, சோனி நிறுவனம் தனது இசை பயன்பாட்டின் மூலம் பெற்ற மொத்த வருமான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






