தென்னிந்திய சினிமாவில் களமிறங்கி உள்ள ஜான்வி கபூர் விரைவில் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகராம் பக்கத்தில் சேவ் த டேட்( save the date) 29 அக்டோபர் என பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு திருமணமா? அல்லது காதலை அறிவிக்க போகிறாரா? என கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதற்கு நெட்டிசன்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






