
சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி தொடங்கிய ‘குட் டீட்ஸ் கிளப்’ அமைப்பின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கோவில்கள் மற்றும் சாலையோரங்களில் பூக்கடைகள் வைத்து விற்பனை செய்து வரும் பெண்களுக்கு நிரந்தரமான பூக்கடைகள் அமைத்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் நடிகை ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் இந்த பெண்களுக்கு நிரந்தர கடைகள் அமைத்துக் கொடுப்பதுடன், அவர்களுக்கு பாதுகாப்பும் மரியாதையும் வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கம் என சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி தெரிவித்தார்.






