
சினிமா பிரபலங்கள் பலரும் இந்த ஆண்டின் தலை தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி, அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டில் உடன் தல தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களையும், வீடியோக்களையும், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘ரஜினி முருகன்’ ‘ரெமோ’ போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான கீர்த்தி சுரேஷ், சில மாதங்களுக்கு முன் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இவரது தீபாவளி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூரி தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினார்.
‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சான்வி மேக்னா, தன்னுடைய தீபாவளி கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதன்பிறகு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அவர்களின் ஆல்பத்திலும் அவர் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிஸியாக உள்ளார்.
நடிகர்கள் நாக சைத்தன்யா, சோபிதா துலிபாலா, காளிதாஸ் ஜெயராம், மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.
கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா, அழகான பாரம்பரிய உடையில் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். அதேபோல், நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது மனைவி தாரிணியுடன் லண்டனில் தல தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதேபோன்று, நடிகை ரம்யா பாண்டியன் தனது கணவர் லோவல் தவான் உடன் பாரம்பரிய உடையில் குடும்பத்துடன் அழகாக தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.






