
ஆச்சி மனோரமாவின் மகன் திரு. பூபதி அவர்கள் இன்று காலை 10.35 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்; அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், 10.35 மணிக்கு மறைந்தார்.
அம்மாவுக்கு (ஆச்சி மனோரமாவுக்கு) அவர்மேல் மிகுந்த பாசம் இருந்தது. அவர் 1955 ஆம் ஆண்டு பிறந்தவர்; நேற்று வரை சேர்த்து அவருக்கு 70 வயது ஆகிறது.
அவருடைய நீண்ட நாள் ஆசை — தாயார் மனோரமா அவர்களின் பெயரை மெலோனி ரோட்டுக்கு வைக்க வேண்டும் என்பதாகும். இந்த ஆசையை மான்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்து நிறைவேற்ற வேண்டும் என விரும்பினார்.
ஏனெனில், மனோரமா அவர்கள் தமிழகத்தின் ஐந்து முதல்வர்களுடன் நடித்து உள்ளார்.இன்றைய முதலமைச்சருடன் நடித்த ஒரே நடிகர் அவரின் மகன் பூபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சொர்ணம் சார் இயக்கிய “ஒரே இரத்தம்” என்ற திரைப்படத்தில், பூபதி அவர்கள் முதலமைச்சர் அவர்களுடன் நண்பராக நடித்துள்ளார். அந்தப் படம் ஈசிஆர் வழியாக உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் படமாக்கப்பட்டது .
எனவே, மான்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பூபதி அவர்களின் ஆசையை நிறைவேற்றுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவரின் இறுதி சடங்கு நாளை காலை 9 மணியளவில் கண்ணம்மாப்பேட்டையில் நடைபெறும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடைய சார்பாகவும், அவருடைய குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.






