Home திரையுலகம் “திரையில் ஹீரோயின்… ரியலில ஹேண்ட்பேக் வில்லத்தி!”

“திரையில் ஹீரோயின்… ரியலில ஹேண்ட்பேக் வில்லத்தி!”

2
0

கொல்கத்தாவில் உள்ள ஆதி பென்ஸ்டல்லா பகுதியில் ஒரு பெண் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கைப்பை (ஹேண்ட்பேக்) மர்ம நபர்களால் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது. அந்த கைப்பையில் இரண்டரை சவரன் தாலி, மூன்று சவரன் தங்கச் செயின், 13 மற்றும் 9 கிராம் எடையுள்ள இரண்டு தங்க கைக்கொடிகள் (பிரேஸ்லெட்டுகள்), மேலும் ரூ.40,000 ரொக்கப் பணமும் இருந்ததாக கூறப்படுகிறது.

நகைகள் மற்றும் பணத்தை இழந்த பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். காட்சிகளில் பிக் பாக்கெட் அடித்தது ஒரு பெண் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவரது அடையாளம் தெளிவாக தெரியாததால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்பகுதிக்கு அருகிலுள்ள பல கடைகள் மற்றும் தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், குற்றத்தில் ஈடுபட்ட பெண்ணின் முகம் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த பெண் யார் என்பதைத் தேடும் போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் — காரணம், பிக் பாக்கெட் அடித்தது ஒரு பிரபல நடிகை என்பது தெரியவந்தது.

அந்த நடிகை ரூபா தத்தா, மேற்குவங்கத்தைச் சேர்ந்த பெங்காலி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் “ஜெய்மா வைஷ்ணோதேவி” என்ற பாலிவுட் தொடர் மூலம் பிரபலமானவர். 2010ஆம் ஆண்டு வெளியான பெங்காலி திரைப்படமான கெல்லாபேட்டைல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் சாத்தி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரூபா தத்தா. மேலும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து, வீடியோக்கள் வெளியிடுவதிலும் போராட்டங்களில் ஈடுபடுவதிலும் இவர் பெயர் பெற்றவர்.

ஆனால், இதே ரூபா தத்தா கடந்த 2022ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், ஒரு பெண்ணிடமிருந்து பை பறிக்கும் முயற்சியில் கையும் களவுமாக சிக்கியிருந்தார். அதற்காக அவர்மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சமீபத்தில், கடந்த மாதம் 15ஆம் தேதி ரூபா தத்தா ஆதி பென்ஸ்டல்லா பகுதியில் மீண்டும் வந்திருந்தார். அப்போது ஒரு கடைக்குள் நுழைந்து, அங்கு நகைகள் வாங்கிய பெண் ஒருவர் தன்னுடைய கைப்பையில் நகைகளை வைப்பதை கவனித்தார். பின்னர் வாய்ப்பைக் கண்டார்; அந்தப் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கெட் அடித்து தப்பிச் சென்றார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். ரூபாவின் அசைவுகளை கண்காணித்து, பெண் போலீசாரை மாறுவேடத்தில் அனுப்பி, ரூபாவை கையும் களவுமாக கைது செய்தனர்.

விசாரணையில் ரூபா தத்தா தொடர்ந்து இதே வகை திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்ததும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை தனது டைரியில் குறித்துவைத்து, அங்குதான் பைக்கட்டிங் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

போலீசார் ரூபாவிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கொல்கத்தா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here