டாடா மோட்டார்ஸின் பங்கு விலை நேற்று ஒரே நாளில் 40%த்திற்கும் மேலாக சரிந்தது. இதனால் அதில் முதலீடு செய்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இதில் முதலீட்டாளர்கள் யாருக்கும் நஷ்டமில்லை என்று டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
இந்த சரிவு விற்பனையால் ஏற்படவில்லை. மாறாக நேற்று டாடாவில் நடைமுறைக்கு வந்த டாடா மோட்டார்ஸ் பிரிவின் காரணமாக ஏற்பட்டது என கூறியுள்ளது. .இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் ஒரு முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனமாகும்.
இந்த டாடா மோட்டார்ஸ் சிறிய நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை அதிகமாக வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும் மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளராகவும் உள்ளது.
50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாடா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸன் பங்குகளின் விலை நேற்று ஒரே நாளில் 40%த்திற்கும் மேலாக சரிந்தது.
இதற்கு முக்கிய காரணமாக டிமஜர் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் தான் இன்று டாட்டா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. டிமர்ஜர் என்பது ஒரு நிறுவனத்தின் வணிக பிரிவுகளை தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கும் செயல்முறையாகும். இந்த செயல் முறைக்கு பிறகு ஒவ்வொரு பிரிவும் அதன் சொந்த பங்குதாரர்களை கொண்டு சுயாதீனமான நிறுவனமாக செயல்படும் என்பதே ஆகும்.
இந்நிலையில் இதுவரையில் ஒரே நிறுவனமாக இருந்த டாடா மோட்டார்ஸ் அக்டோபர் 14, 2025ஆம் தேதியான நேற்று முதல் இரண்டு தனித்தனி நிறுவனமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி பயணி வாகனம், மின் வாகனம் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகியவை தனி நிறுவனமாகவும், டிரக்குகள் ,சரக்கு வாகனங்கள் ஆகிய வணிக வாகன பிரிவு தனி நிறுவனமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயணி வாகன பிரிவு பங்குச்சந்தையில் வர்த்தகமாகிறது. தனி நிறுவனமாக பிரிக்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தையில் இதன் மதிப்பு ₹660ல் இருந்து ₹400 ஆக குறைந்து வர்த்தகமானது. பிரிக்கப்பட்ட வணிக வாகன நிறுவனம் 45 நாட்களுக்குள் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவன பிரிவுக்கு முன் டாடா மோட்டார்ஸில் பங்குகள் கொண்டிருந்த முதலீட்டாளர்களுக்கு 1.1 என்ற விகிதத்தில் பங்குகள் பிரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணி வாகன பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக சைலேட் சந்திராவோ வணிக வாகன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கிரிஷ் வாக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிரக் லாரி போன்ற வணிக வாகன பிரிவில் கடந்த பல ஆண்டுகளாகவே டாடா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கார் பிரிவிலும் கடந்த சில ஆண்டுகளாக டாடா நிறுவனம் மெல்ல வளர்ந்து வருகிறது. இந்நிலையில் டாட்டாவின் பிரிவை தொடர்ந்து நிறுவனம் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடட் என மறுபெயரிடப்படும் என்றும் இது மின்சார கார்கள் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உட்பட அதன் அனைத்து கார் உற்பத்தி வணிகங்களையும் உள்ளடக்கியது.
இந்தியாவின் மிகப்பெரிய டிரக் மற்றும் பேருந்து உற்பத்தியாளரான டாட்டா நிறுவனம். தற்போது பிரிக்கப்பட்ட பின்னர் டாடா மோட்டார்ஸ் லிமிடட் என்று அழைக்கப்படும். மேலும் இதனால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் ஏற்படவில்லை என்றும் இதனால் பயப்பட தேவையில்லை என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது இதுவரை டாடா மோட்டார்ஸ் ஒரே நிறுவனமாக இயங்கி வந்தது. ஆனால் இப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வணிக வாகனங்களுக்கு தனி நிறுவனம், கார் உள்ளிட்ட பாசஞ்சர் வாகனங்களுக்கு தனி நிறுவனம் என இரண்டாக பிரிகிறது அவ்வளவுதான். அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.






