
கைரேகை மூலமும் யுபிஐ பரிவர்த்தனை செய்ய புதிய வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. பின் நம்பர் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது குறிப்பாக இந்தியாவினுடைய யூபிஐ என்று சொல்லப்படும் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்(Unified Interface Payment) இதன் மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்வதும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்போது யுபிஐ மூலம் நாம் பண பரிவர்த்தனை செய்யும்போது யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவருக்கு அதை தேர்வு செய்து நாம் தொகையையும் உள்ளீடு செய்து நம்முடைய பின் நம்பரை நாம் உள்ளிட வேண்டும்.
ஆனால் பின் நம்பருக்கு பதிலாக நம்முடைய முக அடையாளம் அதாவது பேசியல் ரெகக்னிஷன் மற்றும் தம்ப் இம்பிரஷன் கைரேகை (Recognition and thumb impression fingerprint) ஆகியவற்றின் மூலமாகவும் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடிய வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது.
அதற்காக பின் நம்பர் வசதி நடைமுறைக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்ல முடியாது பின் நம்பரை இடக்கூடிய வசதியும் நடைமுறையில் இருக்கும், கூடுதலாக இது போன்று ஸ்பேஷியல் முக அடையாளம் மற்றும் கைரேகை (Spatial facial recognition and fingerprinting) மூலமாகவும் நம்முடைய பண பரிவர்த்தனை செய்யக்கூடிய வசதியும் நடைமுறையில் இருக்கும் .
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது குறிப்பாக இப்போது பின் நம்பரை உள்ளீடு செய்கின்ற போது பின் நம்பர் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அல்லது நாம் பின் நம்பரை உள்ளீடு செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்த்துவிட்டு இதே போன்று பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது .
ஆனால் நம்முடைய கை ரேகையையோ அல்லது முக அடையாளத்தையோ வேறு யாரும் திருட முடியாது குறிப்பாக இது ஆதாரில் நம்முடைய பயோமெட்ரிக் தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவே இந்த ஆதாரில் சேகரிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் அடிப்படையில் தான் இந்த கை ரேகை மற்றும் முக அடையாளத்தின் மூலம் யூபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடிய வசதி நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த விஷயத்தை மும்பையில் நடைபெறக்கூடிய குளோபல் இன்வெஸ்ட் மாநாட்டில் நிதி சேவைகள் துறையினுடைய செயலாளர் நாகராஜ் அறிவித்திருக்கிறார் இது சோதனை அடிப்படையில் இந்தியாவில் இன்றைக்கே இது நடைமுறை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அடுத்த கட்டமாக படிப்பையாக இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் அதேபோல் நம்ம பின் நம்பரை செட் மற்றும் ரீசெட் செய்யும் போதும் இதற்கு முன்பு நாம் டெபிட் கார்டுஉடைய அந்த தரவுகளை உள்ளீடு செய்துதான் பின் நம்பர் எக்ஸ்பரி ஆகிவிட்டால் அதை செட் மற்றும் ரீசெட் செய்ய முடியும்
ஆனால் இனி பின் நம்பரை செட் மற்றும் ரீசெட் செய்வதற்கும் நம்முடைய முக அடையாளம் மற்றும் கைரேகை ஆகியவற்று மூலமாகவே செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பாக இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் எளிமையாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு நாம் ஒரு செயலியை உருவாக்க செயலியை உள்ளீடு உள்ளே நுழைய வேண்டும் என்றால் நமது கைரேகை மூலமாக உள்ளே நுழையக்கூடிய வசதி ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது அதேபோல நம்முடைய செல்போனில் கூட நம்முடைய உள்ளே செல்ல வேண்டும் என்று நம்முடைய கைரேகையை வைத்து உள்ளே செல்லக்கூடிய வசதி இருக்கிறது தற்போது கூடுதலாக யூபிஐக்கும் இந்த வசதி
நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது .




