
ஒரு தியேட்டர்ல 30 வருஷமா ஒரு படம் ஒளிபரப்பாகி வருது. இந்த 30 வருஷமும் ஒரு பெண் தினமும் அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு தவறாம போறாங்களாம். அப்படி என்ன படம்தான் அது பார்க்கலாம்.
ஷாருக்கான் நடிப்புல 1995ஆம் ஆண்டு வெளியான படம்தான் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இதுல கஜோல் நாயகியா நடிச்சிருப்பாங்க. நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்ல உருவான இந்த படம் அந்த காலகட்டத்திலேயே 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியது.
காதல் படமான இது இன்றும் பலரது உள்ளம் கவர்ந்த படமா இருக்கு. தேசிய விருது பெற்ற இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இப்போது மும்பையில இருக்க மராத்தா மந்திர் என்ற திரையரங்குல ஓடிட்டு இருக்காம்.
இப்போதுவரை பால்கனி டிக்கெட் ₹50க்கும், ஸ்டாண்டர்ட் சீட்ஸ் 30-யும் விற்பனை செய்யப்பட்டு வருதாம். இந்த வேலையில வேறு எந்த திரையரங்கமும் டிக்கட் கொடுக்க முடியாது. இந்த நிலையில 30 ஆண்டுகளா காலையில தினமும் 11:30 மணிக்கு தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் இங்க வெளியிடப்பட்டு வருதாம்.
கல்லூரி மாணவர்கள், காதல் ஜோடிகள், ஷாருக்கான் ரசிகர்கள் இந்த படத்தை தவறாம பார்க்க வந்துறாங்களாம். அதிலும் ஒரு பெண் ரசிகை கடந்த 30 ஆண்டுகளா இந்த தியேட்டருக்கு தவறாம வந்துறாங்களாம்.
அவங்களுக்கு மட்டும் இலவசமா டிக்கட் வழங்கப்படுதாம். 500 இருக்கைகள் கொண்ட மராத்தா மந்திர் திரையரங்குல 30 ஆண்டுகளா இந்த படம் ஓடுனாலும் இப்போதும் அப்படி ஒன்னும் கூட்டம் குறையலையாம். அதிலும் நாடு முழுவதிலும் இருந்து ரசிகர்கள் இங்க வராங்களாம்.
இதுல ஆச்சரியப்படுற விஷயம் என்னன்னா கடந்த 2015ஆம் ஆண்டு இந்த படத்தின் ஒளிபரப்பை நிறுத்துவத்காக திரையரங்க நிர்வாகம் முடிவெடுத்திருக்காங்க. ஆனா அதற்கு ரசிகர்கள் கடும் போராட்டமே நடத்தி எதிர்ப்பு தெரிவிச்சதால அந்த திட்டம் கைவிடப்பட்டதாம்.
ஷாருக்கான் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம்தான் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படும் இந்த படம் ஒரு காவியம் என்பதுல மாற்று கருத்து இல்ல.




