உயிரை காப்பார்கள் என்று நம்பப்படும் மருத்துவர்களே உயிரை பறிக்கும் கொலையாளியாக மாறினால், பெங்களூருவில் நடந்திருக்கும் இந்த சம்பவம் மருத்துவ உலகிற்கே ஒரு கருப்பு புள்ளியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு இயற்கை மரணம் போல சுத்தரிக்கப்பட்டு, ஆறு மாதங்களாக மறைக்கப்பட்டிருந்த ஒரு கொடூர கொலை. தற்பொழுது தடையவியல் அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் டாக்டர் கிருத்திகாரெட்டி. ஒரு தோல் மருத்துவர்.
குற்றம் சாட்டப்பட்டவர் அவரது கணவரான டாக்டர் மகேந்திர ரெட்டி ஒரு பொது அறிவை சிகிச்சை நிபுணர்.
இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கிருத்திகாவிற்கு அஜீரணம் குறைந்த சர்க்கரை அளவு போன்ற சில உடல்நல பிரச்சனைகள் இருந்ததை மகேந்திர ரெட்டி கண்டறிந்துள்ளார்.
இந்த விஷயங்கள் திருமணத்திற்கு முன்பு தன்னிடம் மறைக்கப்பட்டதாக கூறி அவர் ஆத்திரம்டைந்துள்ளார். இந்த ஆத்திரமே மனைவியை கொலை செய்யும் கொடூரமான திட்டத்திற்கு வழிவகுத்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கிருத்திகா தனது தந்தை வீட்டில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற கணவர் மகேந்திர ரெட்டி மருத்துவ உதவி செய்வது போல நடித்து கிருத்திகாவிற்கு நரம்பு வழி ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தி உள்ளார்.
இந்த சிகிச்சை இரண்டு நாட்கள் தொடர்ந்துள்ளது. பின்னர் கிருத்திகா மீண்டும் மயக்கமடைய அவரை மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மகேந்திர ரெட்டி ஒரு மருத்துவர் என்பதால் இது ஒரு இயற்கை மரணம் என்று குடும்பத்தினரையும் காவல்துறையையும் எளிதாக நம்ப வைத்துள்ளார். இதனால் மராத் ஹல்லி காவல்துறையினர் இதை ஒரு சந்தேக மரணம் என்று மட்டுமே வழக்கு பதிவு செய்தனர்.
ஆறு மாதங்களாக அனைவரும் இது ஒரு இயற்கை மரணம் என்று நம்பி இருந்தனர். ஆனால் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்டு தடையவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரி அறிக்கைதான் இந்த வழக்கின் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில் கிருத்திகாவின் உடலில் அதிக அளவிலான மயக்கம் மறந்து இருந்ததும் அதுவே அவரது மரணத்திற்கு காரணம் என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. தடையவியல் அறிக்கையின் அடிப்படையில், மராத் ஹல்லி போலீசார் உடனடியாக சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக
மாற்றி, மணிப்பாளில் பதுங்கி இருந்த டாக்டர் மகேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
ஒரு மருத்துவர் தனது மருத்துவ அறிவையே ஒரு கொடூரமான கொலைக்கு ஆயுதமாக பயன்படுத்தி இருப்பது இந்த வழக்கின் மிக அதிர்ச்சிகரமான அம்சம். தற்பொழுது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.






