Home இந்தியா “அமெரிக்க வரி அழுத்தம் இந்தியாவுக்கு சவாலாக இல்லை – ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை”

“அமெரிக்க வரி அழுத்தம் இந்தியாவுக்கு சவாலாக இல்லை – ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை”

2
0

உள்நாட்டு பொருளாதாரத்தையே மையமாக கொண்டு இயங்கும் இந்தியாவிற்கு டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிகள் பெரிய கவலையாக இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியிருக்கிறார்.

உலக வங்கிக்குழு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான கூட்டங்கள் அக்டோபர் 13ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி அக்டோபர் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஐஎம்எப் மற்றும் உலக வங்கி குழு தலைமையகத்தில் இது நடைபெற்றும் வருகிறது.

அந்த கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சஞ்சய் மல்கோத்ரா இந்தியா உள்நாட்டு பொருளாதாரத்தை மையமாக கொண்ட நாடு என்பதால் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இந்தியாவின் மீது விதித்த வரிகள் பெரிய கவலையை ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.

இந்திய பொருட்கள் மீதான வரிகளை டிரம்ப் இரட்டிப்பு ஆக்கி 50%மாக உயர்த்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளன. இதற்கிடையில் இந்தியாவிற்கு பாதிப்பில்லை என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை அடுத்து டிரம்பின் வரி குறித்து குறிப்பிட்ட சர்வதேச நாணைய நிதியம் அமெரிக்காவின் கடுமையான வரிகள் உலக பொருளாதாரம் நெருக்கடியின் அறிகுறிகளை காட்டுகிறது என்று எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து கணிப்புகள் எழும்போது மார்ச் 2026ல் முடிவடையும் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 6 8% வளர்ச்சியை கணித்துள்ளது.

இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பதிவான வளர்ச்சி விகிதங்களில்லிருந்து மந்த நிலையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் எம்பிசி கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் அப்படியே இருக்க முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் டிசம்பர் மூன்றிலிருந்து ஐந்தாம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் கணிப்புகளும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here