
ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார். இதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ஆந்திர மாநிலம் கர்ணூல் பகுதியில் ஆம்னி பேருந்து தீவிபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.




