இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம் ரோகனாத் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்த அட்டர்சிங் என்ற ஆசிரியர், எழுத்துப் பிழையுடன் ஒரு காசோலை நிரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அந்த காசோலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதும், அந்த பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தரம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர் அட்டர்சிங் உண்மையிலேயே எழுத்துப் பிழை செய்தது உறுதியானது என தெரிவித்தனர். இதன் பின்னர், அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.






