மத்திய பிரதேசத்தில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை தனது பதிலால் அதிரவைத்த ஹோட்டல் உரிமையாளரின் செயல் நெட்டுசன்களை சிரிக்க வைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஹோட்டல் சமையலறையில் அங்கும் இங்குமாக எலிகள் ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அவர் இந்த எலிகள் வளர்ப்பு பிராணிகள் தான் பயப்பட வேண்டாம் என கூறி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை அதிர வைத்தார்.
இதை அடுத்து உணவு மாதிரிகளை அதிகாரிகள் சோதனைக்காக எடுத்துச் சென்று ஏழு நாட்களில் குளறுபடிகளை சரி செய்ய கூறி ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்






