
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,“வர்த்தக ஒப்பந்தங்கள் அல்லது பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் காலக்கெடுவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல,”என்று கூறினார்.
மேலும், “இந்திய விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட நாட்டு நலன்களை முழுமையாக பாதுகாக்காமல் எந்த ஒப்பந்தமும் செய்யப்படாது,”என்றும் அவர் வலியுறுத்தினார்.
சில தினங்களுக்கு முன்பு, இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வாலை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.




