
எதிர்கட்சிகளின் கடும் அமலுக்கு இடையே மக்களவையில் வருமானவரி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த புதிய வருமானவரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மக்களவையில் எதிர்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முன்வைத்து கடும் அமலில் ஈடுபட்டதால் பெரிய அளவில் இந்த மசோதா எந்தவிதமான விவாதமும் இன்றி ஒரு நிமிடத்திற்கு உள்ளாக குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய புதிய வருமானவரி சட்டம் 1961க்கு பதிலாக திருத்தி அமைக்கப்பட்ட புதிய வருமானவரி மசோதாவை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய அரசு மக்களவையிலே தாக்கல் செய்தது.
இந்த மசோதாவின் மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்ததை தொடர்ந்து இந்த மசோதாவை தேர்வு குழுவின் பரிசீலனைக்காக மத்திய அரசு அனுப்பியது.
தேர்வுக்குழு இந்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பரிந்துரைகள் மற்றும் மாற்றங்களை வழங்கியது. அந்த மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏற்கனவே தாக்கல் செய்த வருமானவரி மசோதாவை நிதியமைச்சர் திரும்ப பெற்றார்.
அதனை தொடர்ந்து இந்த பரிந்துரைகளை உள்ளடக்கிய திருத்தி அமைக்கப்பட்ட புதிய வருமானவரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் மக்களவையிலே தாக்கல் செய்தார்.
அந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் விவாதம் எதுவும் இன்றி மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இந்த மசோதாவினுடைய மிக முக்கியமான அம்சம் என்பது ஏற்கனவே இருக்கக்கூடிய வருமானவரி சட்டம் என்பது மிக அதிக பக்கங்களை கொண்டதாக பிக்கலானதாக இருக்கிறது.
குறிப்பாக பல சாப்டர்ஸ் ,பலவிதமான உட்பிரிவுகள், பலவிதமான பக்கங்கள் 4000க்கும் மேற்பட்ட பக்கங்கள் என்பது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் குறைத்து சுருக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டதாக கொண்டு வருவது தான் இந்த மசோதாவினுடைய மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது.
இதில் பழைய வருமான வரி சட்டத்தில் இருந்த பல தேவையில்லாத பிரிவுகள் நீக்கப்பட்டு அது எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த புதிய வருமானவரி மசோதாவின் உடைய மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது.
இந்த மசோதா நாளை அல்லது நாளை மறுநாள் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்தால் அது சட்டமாக மாறிவிடும்.






