
இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது. ‘ஸ்வச்பாரத்’ (Swachh Bharat Abhiyan) திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஸ்வச் சர்வேக்ஷன் கணக்கெடுப்பின் அடிப்படையில், அசுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதலிடத்தில் மதுரை, இரண்டாம் இடத்தில் லூதியானா, மூன்றாம் இடத்தில் சென்னை, நான்காம் இடத்தில் காஞ்சி, ஐந்தாம் இடத்தில் பெங்களூரு ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. மும்பை பெருநகரம் எட்டாம் இடத்திலும், நாட்டின் தலைநகரமான டெல்லி பத்தாவது இடத்திலும் உள்ளன




