
தீவிர வறுமையை ஒழித்த முதல் இந்திய மாநிலமாக தன்னை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டே வருகிறது அண்டை மாநிலமான கேரளா. குறிப்பாக கேரளா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நவம்பர் ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.
கேரளாவில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி அன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவை தீவிர வறுமை இல்லாத மாநிலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விழாவில் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த விழாவுக்கு அனைத்து அமைச்சர்களும், எதிர்கட்சி தலைவரும், அழைக்கப்படுகிறார்கள் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எம்பி ராஜேஷ் திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் கேரளாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு இடதுசாரி அரசாங்கம் அமைந்த பிறகு மாநிலத்தில் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது எஸ்ட்ரேமே போவெர்ட்டி ஈரடிக்காஷன் ப்ரோக்ராமம்(Extreme Poverty Eradication Programme) . இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு 100 விழுக்காடு வறுமை ஒழிப்பு எனும் நிலையை தற்போது மாநிலம் எட்ட இருக்கிறது என்றார்.
இந்த தீவிர வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் கேரளாவில் 64,006 குடும்பங்கள் மிகவும் ஏழுமையான குடும்பங்களாக அடையாளம் காணப்பட்டு அதில் 93 விழுக்காடு குடும்பங்கள் தீவிரமான வறுமையில்லிருந்து மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சி உள்ள ஏழு விழுக்காடு குடும்பங்களுக்கும் தேவையான வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கணக்கெடுப்புகளும் பொதுவான வறுமை கோட்டின் அடிப்படையிலான கணக்கெடுப்புகளாக அல்லாமல் உள்ளூர் அளவில் மக்கள் நேரடியாக அணுகும் குடும்பஸ்ரீ போன்ற திட்டங்களின் மூலமும் பஞ்சாயத்துகள் மூலமும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
உணவு, சுகாதாரம், பாதுகாப்பான வீட்டு வசதி மற்றும் நிலையான வருமானம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குடும்பங்களாக பார்த்து பார்த்து 64,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் தேவைகளை தடையின்றி வழங்குவதன் மூலம் அவர்களை மீட்டெடுத்த பிறகு கேரளா இப்போது நவம்பர் ஒன்றாம் தேதி கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் என்று நாட்டின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட உள்ளது.
தீவிர வறுமையை வெற்றிகரமாக ஒழிப்பதில் கேரளா நாட்டிலேயே முதல் இடத்திலும், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாவது இடத்திலும், இருப்பதால் இது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம் என்று எம்பி ராஜேஷ் கூறியுள்ளார்.
தற்போதைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முதல் முடிவு இபிபி ஆகும். இது தீவிர வறுமையை ஒழிப்பதற்கான இந்த ஆண்டு திட்டமாக கருதப்பட்டது. இப்போது நாங்கள் எங்கள் இலக்கில் 100 விழுக்காட்டை அடைந்துவிட்டோம் என்று அவர் கூறினார்.





