
சமூக வலைத்தளங்களில் மாடல் ஐஏஎஸ் கப்பில் என அறியப்பட்டவர்கள் ஸ்ருஷ்டி தேஷ்முக் மற்றும் நாகார்ஜுன் கவுடா. நாடு முழுவதும் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் பலருக்கும் இவர்கள் ரோல் மாடலாக உள்ளனர். இருவரும் மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பலருக்கு முன்மாதிரியாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் நிலையில் நாகர்ஜுன் கவுடாவுக்கு எதிராக 10 கோடி ரூபாய் லஞ்ச புகார் எழுந்து பரபரப்பாக பேசப்படுகிறது. லஞ்ச புகாரின் பின்னணி என்ன? 2019 ஆம் ஆண்டு குடிமை பணி தேர்வில் அகில இந்திய அளவில் ஐந்தாம் இடம் பிடித்தவர் ஸ்ருஷ்டி தேஷ்முக் அவரது கணவர் மருத்துவர் நாகார்ஜுன் கவுடா.இருவரும் யுபிஎஸ்சி தேர்வில் 418வது இடம் பிடித்தனர்.
இருவரும் மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் ஸ்ருஷ்டி தேஷ்முக் மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ளார். நாகார்ஜுனா கவுடா மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரையும் மாடல் ஐஏஎஸ் கப்பில் என அழைத்து பலரும் புகழ்ந்து வருகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் பலரும் இவர்களை ரோல் மாடலாக வைத்து தயாராகி வருகின்றனர்.மேலும் தேர்வுக்கு தயாராகும் பலருக்கும் இவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகார்ஜுனா மீது 10 கோடி ரூபாய் லஞ்ச புகாரை ஆர்டிஐ செயற்பாட்டாளர் ஆனந்த் ஜாட் குற்றம் சாட்டி உள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலம் ஹதாவில் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது பாத் இந்தியா என்ற சுரங்க நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக புகாரை கூறியுள்ளார்.
அந்த நிறுவனம் இந்தூரில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மணலை வெட்டி எடுத்ததாக புகாரில் சிக்கியது. அப்போது அந்த நிறுவனத்துக்கு 51 கோடியே 67 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இது வெறும் 4000ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை நாகார்ஜுனா லஞ்சமாக பெற்றதாக ஆனந்த சாட் புகார் கூறியுள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் 55 பக்க அறிக்கையையும் அவர் ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தீயாய் பரவி மாடல் ஐஏஎஸ் கப்பலின் நேர்மை குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி நாகார்ஜுன் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஆனந்து ஜாட் கூறிய குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தவர் தனது முடிவு அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற பதிவுகளை அடிப்படையாக கொண்டது என்று கூறியுள்ளார். அபராதத்தை குறைத்ததில் தனக்கு தனிப்பட்ட விருப்பமோ ஆதாயமோ இல்லை என்றும் கூறியுள்ளார்.
அந்த நிலத்தில் மணல் அள்ளுவதற்கான அனுமதி பல ஆண்டுகளாக இருப்பதாகவும் ,உரிய நடைமுறையை பின்பற்றியே அபராதத்தை குறைத்ததாக கூறியுள்ளார்.




