
ஓசூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்கொள்ளும் பகுதியை சேர்ந்தவர் சிவபூபதி ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவரின் மனைவி பார்வதி கடந்த வாரம் தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற நிலையில் தனது இரு மகன்களுடன் ஓசூர் மாநகராட்சியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் தனது வாடகை வீட்டில் இரவு தூங்கியுள்ளார்.
அதிகாலை 3:30 மணி அளவில் எழுந்து தனது இரு மகன்களையும் நரேந்திர பூபதி, லத்தீஸ் பூபதி ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ அருந்துவிட்டு பிறகு வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீசார் முதல் கட்ட விசாரணையில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் தனது மகன்களும் இந்த உலகில் கஷ்டப்படக்கூடாது என்று எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனது மனைவி சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராகவும் அதே பள்ளியில் இரு மகன்களும் படித்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. தற்போது உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்




