
மும்பையின் புவாய் (Powai) பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவிற்கு ஆடிஷனுக்காக சென்ற 17 பள்ளி மாணவர்களை, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நபர், மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து, ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினர் அந்த நபரின் தொலைபேசி எண் மற்றும் அவர் தங்கியிருந்த கட்டடத்தைச் சுற்றிவளைத்து, இன்று காலை அந்த 17 பள்ளி மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில் தெரியவந்ததாவது — மாணவர்கள் நடிப்பு ஆடிஷன் டெஸ்ட்டுக்காக அந்த ஸ்டுடியோவுக்கு சென்றபோது, அந்த மனநலம் பாதித்த நபர் அவர்களை அறையில் அடைத்து வைத்ததுடன், மற்றொரு பகுதிக்கு கடத்த முயன்றுள்ளார். பின்னர், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் பணையத் தொகை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுத்து புவாய் பகுதியில் உள்ள அந்த கட்டடத்தை முற்றுகையிட்டு, 17 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
எதற்காக அவர் பள்ளி மாணவர்களை கடத்தி ஒரு அறையில் அடைத்து வைத்தார் என்பதையும், அதில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பதையும் கண்டறிவதற்காக, காவல்துறையினர் தற்போது அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் பட்ட பகலில் 17 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம், நகரம் முழுவதும் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, காவல்துறையினர் அந்த 17 மாணவர்களையும் பாதுகாப்பாக மீட்டு, அவரவர் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் ஒப்படைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ள நிலையில், ஒரே நேரத்தில் 17 மாணவர்களை கடத்தி பிணைக்கைதிகளாக வைத்ததற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து காவல்துறை பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.




