
சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக ஐபிஎல் கோப்பையை வென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் காரணமாக ஆறாவது கோப்பையுடன் விடைபெறலாம் என்ற எண்ணத்தில் இருந்த தோனி. தற்போது மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை கட்டமைக்க போராடி வருகிறார்.
இந்த நிலையில் டிசம்பரில் நடைபெறும் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஓவென் (Mitchell Owen) டார்கெட் செய்ய சென்னை அணி திட்டம் தீட்டி வருகிறதா மிட்சல் தற்போது காயமடைந்த மேக்ஸ்வெலுக்கு மாற்று வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கிறார்.
மேக்ஸ்வில் மீண்டும் உடல் தகுதி பெற்றுவிட்டால் ஓவனுக்கு பஞ்சாப் அணியில் வாய்ப்பு கிடைக்காது. இதனால் மினி ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் அவரை விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி மினி ஏலத்தில் ஓவன் வந்தால் என்ன விலை கொடுத்தாவது அவர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிஎஸ்கே இருக்கிறதாம். ஜடைஜா தவிர்த்து அணியில் வேறு சொல்லிக்கொள்ளும்படியான ஆல்ரவுண்டர் வீரர் யாரும் இல்லை என்பதும் மிட்சல் ஓவனுக்கு சிஎஸ்கே(CSK) ஸ்கெட்ச் போடுவதற்கு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.






