
பார்சலோனாவில் நடைபெற்ற ஐரோப்பிய கார் பந்தைய தொடரில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அஜித் குமார் ரேசிங் டீம் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், அஜித் அணியின் வெற்றியால் சர்வதேச கார் பந்தயத்தில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அணியின் ரேசிங் உபகரணங்களில் மற்றும் ஜெர்சிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லட்சணை பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றும், அஜித் அணிக்கு எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் ரேசிங் அணி, தமிழ்நாடு அரசின் அன்பும் ஆதரவும் எப்போதும் துணையாக இருந்தது என பெருமிதம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டப்பந்தயங்கள் தொடர்பாக, அஜித் அணி:
டிசம்பர் 13–14, 2025: மலேசியா – ஆசிய லெமன்ஸ் தொடரில் பங்கேற்பு
ஜனவரி 31 & பிப்ரவரி 1, 2026: துபாய் – கிரவென்டிக் 24 மணி நேர பந்தயம்
பிப்ரவரி 7–8, 2026: அபுதாபி – கிரவென்டிக் 24 மணி நேர பந்தயம்
அஜித் அணி, தொடரும் சர்வதேச போட்டிகளில் மேலும் பல வெற்றிகளை குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.





