2025 சீசனில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகுவதாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அறிவித்துள்ளார்.
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2025ஆம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து தொடர்களிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பயிற்சி குழுவுடன் ஆலோசித்ததுடன், மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையிலும், முழுமையாக குணமடைய சில காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். அதனால் 2025ஆம் ஆண்டில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகுகிறேன்,” என்று கூறியுள்ளார்.






