
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த எட்வினா ஜேசன் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவருக்கும் உடனடியாக வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தாயகம் திரும்பிய அவருக்கும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எர்வினா ஜேசன், சிறிய கிராமத்தில் பிறந்த தம்மை பயிற்சியின் மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாட வைத்து சாதிக்க வைத்த தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.






