ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பஹ்ரைனில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர்கள் 19 விளையாட்டுகளில் போட்டியிட்டுள்ளனர். இதில் கபடி போட்டிகளில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
இறுதி போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஈரானை 35–31 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. இதே போல பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதி போட்டியில் 75–21 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றிகளின் மூலம் இந்தியாவின் மொத்த பதக்கங்கள் 12 ஆக உயர்ந்து, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது பதக்க பட்டியலில் சீனா எட்டு தங்கப் பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது.






