தொடர்ந்து 18 ஆண்டுகளாக ஒரே ஐபிஎல் அணிக்காக விளையாடிய வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு உண்டு. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இளம்வீரராக தொடங்கி, பின்னர் கேப்டனாக மாறி, பின்னர் மீண்டும் வீரராக மட்டுமே விளையாடியவர் விராட்.
ரஜித் பதிதார் தலைமையில் அந்த அணி 18வது ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஆனால் அணியின் வெற்றி விழாவில் 11 ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் அணி விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் முடிவெடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஆர்சிபி அணியுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அணி நிர்வாகம் மாற்றப்படுவது, ரசிகர்கள் உயிரிழப்பு ஆகியவை இதற்குக் முக்கிய காரணங்களாகும் என்று கூறப்படுகிறது.
இதனால், 19வது ஐபிஎல் தொடரில் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை கோலி ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால், அது பெங்களூர் அணிக்கு மட்டுமல்ல, ஐபிஎல் தொடருக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.






