மதுரையில் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் கால்வாயில்லிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இளைஞர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
யாகப்பா நகரைச் சேர்ந்த தினேஷ் குமாரை அண்ணாநகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசாரிடமிருந்து தப்பி வண்டியூர் வாய்க்காலில் குதித்ததில் தினேஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசார்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞரின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






