சென்னை கிரீன் சாலைகள் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிகாரிகள் புறப்பட்டிருக்கின்றனர். இன்று காலை முதலாகவே சென்னையில் இந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு என்ற தகவலானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த சமயத்தில் தான் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கக்கூடிய வருமானவரித்துறையின் அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
இவர்களை பொறுத்தவரையிலும் இன்று காலை வெளியான தகவலின் அடிப்படையில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த வருமானவத்துறை அதிகாரிகளின் ரெய்டு ஆனது நடைபெறவிருக்கின்றது. அதே சமயம் இந்த இடங்களுக்கு எந்தெந்த இடத்தில் ரெய்டு நடக்கிறதோ அங்கு அந்தந்த மண்டலங்களில் இருக்கக்கூடிய வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
சென்னையை பொருத்தவரையிலும் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒவ்வொரு வாகனத்திற்கும் நான்கு வருமானவத்துறை அதிகாரிகள் வீதமாக தற்போது புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் சென்னையில் இருக்கக்கூடிய ஆலந்தூர், அண்ணாநகர் அதேபோல வளசரவாகம் ஆகிய பகுதிகளை நோக்கி தற்போது காரில் சென்று கொண்டிருக்கின்ற.






