
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளையும், இருள் சூழ்ந்து கொண்டு மிதமான மழை பெய்து வரும் நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு உருவான மோந்தா புயலானது இன்று காலை தீவிர புயலாக வழிபெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் ,நேற்று முதலே சென்னையில் பரவலான மழை பெய்து வந்தாலும் ,இன்று காலை பலத்த காற்றுடன் பரவலான மழை என்பது நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.
அண்ணாசாலை பகுதியில் பலத்த காற்றுடன் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருவதன் காரணமாக வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள், கல்லூரிக்கு செல்லக்கூடிய நபர்கள் சிரமத்துடன் அவர்கள் பணிக்கு செல்லக்கூடிய ஒரு சூழல் என்பது ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள், கல்லூரிக்கு செல்லக்கூடிய நபர்கள் சிரமத்துடன் பணிக்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் என்பது ஏற்பட்டிருக்கிறது.
தீவிர புயலாக வலுபெற்றாலும், இந்த மோந்தா புயலானது மச்சிலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம், ஆந்திர பிரதேசம் ஒடிசபை ஒட்டிதான் தீவிர புயலாக இன்று மாலை கரைய கடக்கும் என கூறப்பட்டாலும் ,இந்த மோந்தா புயல் தமிழகத்தை விட்டு சற்றே விலகி சென்றிருக்கிறது.
அதன் காரணமாக இன்றைய தினம் மிக கனமழை முதல் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில நகரின் பல்வேறு பகுதிகளிலுமே பரவலான மழை என்பது மட்டுமே பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மோகந்தா புயலானது தமிழகத்தை விட்டு சற்றே விலகி இருக்கிறது.
ஆனாலும் கூட சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று முதலே பரவலான மழை பெய்தாலும், இன்று பலத்த காற்றுடன் மழை என்பது பெய்து வருகிறது.
தீவிர புயலாக வழுபெற்றிருக்கக்கூடிய நிலையில், சென்னையில் பல பகுதிகளிலுமே காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்து வருவதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்திருக்கிறார்கள்.
மேலும் சென்னையில் இன்று முழுவதுமாகவே பலத்த காற்றுடன் கூடிய மழை தொடரும் எனவும், ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலவி வரக்கூடிய மோந்தா புயலானது தற்பொழுது அதிதீவிர புயலாக மாறி இருக்கக்கூடிய நிலையில் இன்று மாலை மற்றும் இரவுக்குள்ளாக தீவிர புயலாகவே ஆந்திர பிரதேசம் ஒடிசா அருகே கரைய கடக்கும் என கூறப்பட்டிருக்கிறது.
இதனால் தமிழகத்திற்கு மழைக்கான பாதிப்பு என்பது படிப்படியாக குறையும் என கூறப்பட்டாலும், சென்னை பகுதிகளில் காற்றின் வேகம் என்பது அதிகரிக்கும் என கூறப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பரவலான முதல் கனமழை பெய்யும் எனவும், கனமழையின் பொழுது காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
எனவே சென்னையில் காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகள் அண்ணாசாலை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி அதேபோல் டி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை என்பது நேற்று முதல் பெய்து வந்தாலும், தற்பொழுது சென்னையில் பல பகுதிகளில் காற்றின் வேகம் என்பது அதிகரித்திருக்கிறது.
இன்று முழுவதுமாகவே சென்னையில் காற்றினுடனே கூடிய பரவலான மழைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தீவிர புயலாக வழுபெற்றிருக்கக்கூடிய மோந்தா புயலானது இன்று மாலை அல்லது இரவு கலிங்கப்பட்டினம், மச்சிலிப்பட்டினம், ஆந்திர பிரதேசம், ஒடிசா அருகே தீவிர புயலாகவே கரைய கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று முழுவதுமே சென்னையில் பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




