
வேலூர் நீதிமன்ற வளாகத்தில் சிறை கைதிகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்களின் சிறப்பு விற்பனையை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
வேலூரில் உள்ள மத்திய சிறைகள் சுமார் 700 முதல் 850 கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலை கைதிகளின் தீர்த்திருத்தம் மற்றும் மறுவாழ்வை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகளுக்கு திறன் மேன்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களால் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு கைதிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், காலணிகள் உட்பட பல்வேறு பொருட்களின் சிறப்பு விற்பனை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழாகத்தில் இன்று தொடங்குகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விற்பனையை வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் கைதிகளின் மறுவாழ்வுக்கும், அவர்களது குடும்பங்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்று சிறையதிகாரிகள் தெரிவித்தனர்.





