தமிழகத்தில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கடைகளில் ‘ஓஆர்எஸ்’ லேபிள் ஒட்டிய பொருட்களுக்கு சுகாதாரத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
‘ஓஆர்எல்’, ‘ஓஆர்எஸ் பிளஸ்’, ‘ஓஆர்எஸ் பிட்’ என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் பவுடர்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்தொடர்பாக, தமிழக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திற்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி, தேவையான நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.






