
சென்னையை அடுத்த ஆவடி நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50வது ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 1993ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பள்ளியில் கல்வி பயின்ற 700க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி பழைய நினைவுகளைப் பகிர்ந்தனர். அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பலரும் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.
அந்த நிகழ்வில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய செயலை முன்னாள் மாணவர் கோபாலகிருஷ்ணன் நிகழ்த்தினார். அவருக்கு கல்வியறிவை ஊட்டிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முன் அறிவிப்பின்றி மொத்தம் 56 லட்சம் ரூபாயை அவர்களிடையே பகிர்ந்தளித்தார்.
“என்னை இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது என் ஆசிரியர்கள்தான். அவர்களின் அர்ப்பணிப்பால் தான் நான் வாழ்வில் முன்னேற முடிந்தது. சிலர் இன்று நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கேள்விப்பட்டபோது, அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது,” எனக் கூறினார்.
அவர் மேலும் ஒரு கோடி ரூபாயை ஒரு டிரஸ்டில் வைப்பதாகவும், அந்த நிதி ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.அதோடு, பள்ளியில் பணியாற்றிய ஹவுஸ் கீப்பிங் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கல்வியளித்த ஆசிரியர்களுக்கு முன்பே இதுபோன்ற நன்றியை தெரிவிக்க முடியாததற்காக வருத்தம் தெரிவித்த கோபாலகிருஷ்ணன்,




