கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்றைய தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தரப்பில் அவருடைய வழக்கறிஞர் கரூர் செல்வதற்கும் அனுமதி கேட்டும் பாதுகாப்பு கோரியும் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்த நிலையில் தற்போது கரூரில் இருக்கக்கூடிய தனியார் மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் கட்சியின் தொண்டர்கள் ,பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினருக்கும் கூட அனுமதி இல்லை என்ற தகவலும் கிடைக்கப்பட்டிருக்கிறது. கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில் . தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழுந்தவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்
தெரிவிக்க திட்டமிட்டுருக்கிறார்.
அவர் அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தையும் நேரில் சந்தித்து கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் விஜய் இதற்கு முன்னதாகவே 20 பேர் கொண்ட குழுவையும் நியமித்திருந்தார். கரூர் சென்று அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் அணுகி விஜயிடம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசவும் வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் விஜய் கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலத்திற்கு மனுவும் கொடுக்கப்பட்டது. அந்த மனுவில சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூர் சென்று மீண்டும் திருச்சி விமான நிலையம் வரும்வரை காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், விஜய் வாகனம் செல்லும் நேரத்தில் அவருடைய வாகனத்திற்கு பின்னால் யாரும் வர அனுமதிக்க கூடாது என்றும், கட்சியுடைய தொண்டர்கள் பொதுமக்கள் ஊடகங்கள் என யாரும் வாகனத்தை பின்தொடர அனுமதிக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர் .
அதனுடைய தொடர்ச்சியாக நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எந்த ஒரு கூட்டமும் கூட அனுமதிக்க கூடாது என்றும் ,போலீசாரிடம் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய வழக்கறிஞர் பிரிவு கோரிக்கை வைத்திருக்கின்றனர் .
டிஜிபி இடம் தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு மேலும் தேதியை குறிப்பிடாமலே இந்த மனுவை கொடுத்திருக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கரூர் சென்று சந்திப்பதற்கான தேதியை கரூர் மாவட்ட எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடி தெரிவிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்






