கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டுபாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமான பைக்கை காவல் துறையினர் பறிமுதம் செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் கோவை விமான நிலையம் பின்புறம் பகுதியில் இரண்டு பேர் அதாவது ஒரு இளைஞர் தனது தோழியுடன் காரில் அமர்ந்திருந்த
வேளையில் அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண் கல்லூரி மாணவி கோவை அவிநாசி சாலையில் இருக்கக்கூடிய பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுகலை படிக்கக்கூடிய மாணவி.
அந்த மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதே வேளையில் அந்த மாணவியுடன் இருந்த இளைஞரையும் கடுமையாக அறிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிற நிலையில் இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போதுவரை ஏழு தனிப்படைகள் அமைத்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சூழல்ல அந்த சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருசக்கர வாகனம் ஒன்றை தற்போது கீழமேடு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இருசக்கர வாகனம் யாருக்கு சொந்தமானது இருசக்கர வாகனம் எப்படி அந்த இடத்திற்கு வந்தது என்பது தொடர்பாகத்தான் தற்போது விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக அந்த காரில் இளைஞன் மற்றும் கல்லூரி மாணவி ஆகியோர் சென்ற பொழுது இருசக்கர வாகனத்தில் அவர்கள் பின்தொடர்ந்து சென்றார்களா அல்லது ஏற்கனவே அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த மூன்று பேர் அங்கு இருந்தார்களா? குறிப்பாக இந்த குற்றவாளிகளுக்கு சொந்தமானதுதான் அந்த இருசக்கர வாகனமா என்ற அடிப்படையில் தற்போது காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதற்கிடையே ஏற்கனவே நேற்று அதாவது இன்று அதிகாலை அந்த பாதிக்கப்பட்ட மாணவி கோவை அவிநாசி சாலையில் இருக்கக்கூடிய பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அந்த மாணவி மாற்றப்பட்டிருக்கிறார்.
அவரது உடல்நிலை மோசமானதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதே வேளையில் இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து கேட்டபொழுது அது குறித்த தகவல் தர முழுமையாக அவர் மறுத்திருக்கிறார்.
மேலும் இது மட்டுமல்லாமல் அந்த மாணவியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றால் அது தனக்கு தெரியாது என்ற ஒரு அடிப்படையில் அவர் பதிலளித்திருக்கிறார். எனவே மாணவியின் உடல்நிலை என்பது தற்போது மோசமாக உள்ளதாகத்தான் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே ஏற்கனவே இந்த சம்பவம் நடைபெற்றபோது வெட்டுக்காயங்களுடன் அந்த இளைஞர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழல்ல எங்குமே சிசிடிவி காட்சிகளில் இந்த அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்த அந்த மூவர் யார் என்பது குறித்து தகவல் தெரியாத நிலையில், சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இப்போது இந்த இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டிருக்கக்கூடிய சம்பவம் என்பது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த இருசக்கர வாகனத்தை பொறுத்தவரை, இந்த பகுதியை சேர்ந்த லோக்கல் நபர்கள் என்று சொல்லக்கூடிய உள்ளூர் நபர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா அல்லது வெளியூரில்லிருந்து வந்து இங்கு தங்கி வேலை செய்யக்கூடிய நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






