திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது தக்காளி விலையானது கிடுகிடு என உயர்ந்துள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அதேபோல் வந்து தக்காளிக்கு பிரத்தியோகமான சந்தை வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் சந்தை.
இந்த இரண்டு சந்தைகளில் இருந்தும் தினந்தோறும் தக்காளிகள் கேரளா மற்றும் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பெட்டிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்ட சுற்றுப்புற பகுதிகளில் விளையும் தக்காளிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மற்றும் அய்யலூர் காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக தற்போது தக்காளி விளைச்சலானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக காய்கறி விவசாயிகள் கூறுகின்றனர்.
இவர்கள் கூறும் பொழுது கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 டன் வரை வந்த தக்காளி தற்போது வந்து 5 டன் வரையே வருகின்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 15 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 200 முதல் 260 வரை விற்பனையானது.
தற்போது இதன் விலை கிடுகிடுவென உயர்ந்து₹350 முதல் 450 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து மழை பெய்தால் வரத்து குறையும். இதன் காரணமாக தக்காளி விலை மேலும் உயரக்கூடும். தற்போதே 40 ரூபாய் முதல் 50 ரூபாய் கிலோ விற்பனையாக வரும் தக்காளி மேலும் தொடர்ந்து மழை பெய்த பெய்தால் கண்டிப்பாக 50 ரூபாய்க்கு மேல் விலை உயரக்கூடும் என கூறுகின்றனர்






