
திருப்பூர் அருகே சிறுக்கிணர் என்ற பகுதியில் சாலையோரம் மூட்டை மூட்டையாக டன் கணக்கில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டிச் சென்றதன் காரணமாக அப்பகுதியில் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு துர்நாற்றம் வீசி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த சிறுகிணறு என்ற கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை இயற்றி வந்த வாகனமானது அங்குள்ள சாலையின் ஓரத்தில் மூட்டை மூட்டையாக டன் கணக்கில் மருத்துவ கழிவுகளை சாலையின் ஓரத்தில் கொட்டிச் சென்றுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவ கழிவுகளை சோதனை செய்ததில் கேரள மாநிலம் கொச்சி பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட மருத்துவ கழிவுகள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மருத்துவ கழிவுகளில் இருந்து தற்போது துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளதால் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊதியூர் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் குண்டம் ஈரோடு சாலையில் சிறுகிணறு என்ற பகுதியில் கேரளா மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டிச் சென்ற வீடியோ காட்சிகளானது தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





