மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த மாணிக்கவாசக சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் சாமிசிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயல்வதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு வந்து ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
அதன் அடிப்படையில் பார்க்கும்போது திருநெல்வேலி சரக ஆய்வாளர் தலைமையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்காங்க. அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி பைக்கில் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஒரு அடி உயரத்திற்கு 3.5 கிலோ எடை அளவு கொண்ட மாணிக்கவாசகர் சிலை ஒன்று இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனை அடுத்து பைக்கை ஓட்டி வந்த மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைக்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசிமாயனிடம் சிலை குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது மதுரை உசிலம்பட்டியில் ஆணையூர் கிராமத்தில் உள்ள மீனாட்சி கோவிலில் இருந்த மாணிக்கவாசகர் உலோக சிலையை வந்து அவரது நண்பர்களான சோலை, வேல்முருகன், மதன் ஆகியோரிடம் இருந்து கூட்டாக சேர்ந்து திருடியதாக கூடியிருக்கிறார்கள்.
மேலும் காசிமாயன் அந்த சிலையை விற்க முயற்சி செய்தபோது பாப்பம்பட்டியை சேர்ந்த தவசி என்பவரிடம் விற்க முயன்று இருக்கிறார். கடத்தப்பட்ட மாணிக்கவாசகரின் சிலையை விற்க காசிமாயனும், தவசியும் சம்பவ இடத்திற்கு சிலையை வாங்க இருவரும் நாள் முகவருக்காக காத்திருந்திருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்து காசி மான் மற்றும் தவசி ஆகிய இருவரையும் கைது செய்து ஒரு மாணிக்கவாசகர் உலோக சிலையையும், கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த பைக்கையும் தற்போது மீட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






