
மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்க்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேச கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் எட்டாம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.




