
விமானத்தில் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.
மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது முன்பாக்க கண்ணாடி விரிசல் காணப்பட்டது இதனால் விமானி அதிர்ச்சி அடைந்தார் அதனை அடுத்து சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவலும் அளித்தார்.
மேலும் அந்த விமானம் இரவு 11:30 மணிக்கு தான் சென்னையில் தரையிரங்க வேண்டும். ஆனால் விமானி அவசரமாக, வேகமாக சாதுரியமாக விமானத்தை ஓட்டி வந்தார் .
இந்த நிலையில் அதற்கான அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டு தனியான பகுதியில் நிறுத்தி பாதுகாப்பாக தரையிறங்க ஏற்பாடு செய்தனர் .இந்த நிலையில் பாதுகாப்பாக இறங்கியது .
இதில் வந்து 74 பயணிகள் ஐந்து விமான ஊழியர்கள் உட்பட 79 பேர் பயணித்தனர் இந்த நிலையில் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்ட நிலையில் விமானிக்கு அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த விமானத்தில் முன்பக்க கண்ணாடியை மாற்றும் பணி நடைபெறுகிறது.
இது அடுத்து விமானம் கோழிக்கோடு காலை 5:20 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக வேறு விமானத்தை அனுப்பி உள்ளார்கள். திடீர் விரிசல் ஏற்படுவதற்கு காரணம் என்ன? பறவை மோதியதா, இல்ல பறக்கும்போது ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினையால் ஏதாவது ஏற்பட்டதா? என விமான நிலைய சிவில் ஏவியேஷன் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





