
நமக்காக பொதிசுமந்த கழுதையை காப்பாற்ற வேண்டும் என யாராவது கவலைப்பட்டீர்களா என தெருநாய் விவகாரம் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அனைத்து உயிர்களையும் முடிந்த அளவிற்கு பாதுகாக்க வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் தெருநாய்களின் தொல்லைக்கு தீர்வு மிக எளிமையானது .
அது சமூக சுகாதாரம் தெரிந்தவர்களுக்கே தெரியும் என தெரிவித்தார். விஷயம் தெரிஞ்சவங்க உலக சரித்திரம் தெரிஞ்சவங்க சமூக சுகாதாரம் என்னன்னு தெரிஞ்சவங்க கழுதை எங்க காணும்னு யாராவது கவலைப்படுறாங்களா
கழுதை எல்லாம் காணாம போச்சே நமக்காக எவ்வளவு பொதி சுமந்துருக்கு இப்ப பா்கறதே இல்லையே கழுதைய யாராவது காப்பாத்தணும்னு பேசுறாங்களா எல்லா உயிர்களையும் காப்பாத்தணும் எவ்வளவு முடியுமோ காப்பாத்தணும் அவ்வளவுதான் என்னுடைய கருத்து .




