
கோடம்பாக்கம் வந்தடைந்தது பெலிகன் இயந்திரம். பனகல் பூங்கா, கோடம்பாக்கம் வந்தடைந்திருக்கிறது பெலிகன் இயந்திரம். சென்னை நிலத்தடியில் உள்ள சவாலான கடினமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக கடந்து தற்போது கோடம்பாக்கம் வந்தடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று வழித்தடங்களில் சுமார் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ பணிகள் என்பது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு கட்டமாக சுரங்கம் தோண்டும் பணிகள் மற்றும் உயர்மட்ட பாதை பணிகள் என்பது நிறைவு பெற்று வரும் நிலையில் தற்பொழுது சென்னை மெட்ரோ நிலையத்தில் வழித்தளம் நான்கில் பெலிகன் என்று அழைக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையத்தில் இருந்து மீனாட்சி கல்லூரிக்கு அருகில் உள்ள கோடம்பாக்கம் சாய்வு தளம் ஆகியவற்றுக்கு இடையே சுரங்க பாதையாக அமைய உள்ள நிலையில் அந்த பணியை தற்பொழுது இந்த பெலிக்கன் என்பது நிறைவு செய்திருக்கிறது.
இதற்கு முன்னதாக இதற்கு இணையாக அமைக்கப்பட்ட மற்றொரு சுரங்க பாதையின் பணியை மயில் எனப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூலை 23 ஆம் தேதியே வந்தடைந்த நிலையில் அதே பாதையில் வரும் மற்றொரு சுரங்கம் தோண்டும் பணியான அந்த இயந்திரமான பெலிகன் என்பது தற்பொழுது தனது பணியை நிறைவு செய்திருக்கிறது.
இந்த வழித்தடத்தில் பணி என்பது கடந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டு மே 14ஆம் தேதி என்பது இந்த பிரதான சுரங்கம் தொண்டு பணி என்பது தொடங்கப்பட்ட நிலையில் 594 நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில் தற்பொழுது 2076 மீட்டர் தூரத்திற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் என்பது தற்போது நிறைவடைந்திருக்கிறது.
இதனை சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர்கள் மற்றும் திட்ட இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் ஆகியோர் சென்று நேரடியாகவே இந்த பணிகளை நிறைவடைந்ததை பார்வையிட்டு வந்தனர்.





