
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு அதில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓடி உள்ளனர். ஒரே நேரத்தில் 35 பேர் தப்பி ஓடியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து காவலாளியை தாக்கிவிட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு சக்கரா நகர் பகுதி சென்னை சென்டருக்கு என தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
இதில் போதை பழக்கத்திற்கு அடிமையான நூறுக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்த நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த 35 பேர் திடீரென ஒன்று கூடி ஒரு டீமாக செயல்பட்டு அங்கு பணியில் இருந்த காவலாளியை தாக்கிவிட்டு போதை மறுவாழ்வு மையத்திலிருந்து அவர்கள் தப்பி செல்ல, இது குறித்து மாங்காடு போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை என்ற பெயரில் கொடுமைப்படுத்தினார்களா? அதனால் தப்பினார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என கேள்வி எழுந்தது இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போதை மறுவாழ்வு மையத்திலிருந்து ஒரே நேரத்தில் 35 பேர் தப்பி ஒடிய சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது





