
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான்பேட்டையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட தொடக்கப்பள்ளியில் அதற்கான கூடுதல் கட்டிடம் கட்டி தரப்படவில்லை எனக் கூறி மாணவர்களுடன் அவர்களது பெற்றோர் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தம்பேட்டை மீனவர் கிராமத்தில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால் நான்கு ஆண்டுகளாக தெடக்கப்பள்ளியிலேயே உயர்நிலை பள்ளியும் செயல்பட்டு வருவதால் கூடுதல் கட்டிடம் விளையாட்டு மைதானம் இல்லாமல் மாணவ மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே இதுவரை இடம் தேர்வு செய்து உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்ட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வந்து நான்கு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது உயர்நிலை பள்ளி கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தியும் அடிப்படை வசதிகள் செய்துத்தர கோரியும் கோசங்களை எழுப்பினர். பள்ளி மாணவ மாணவிகளுடன் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சாமந்தான்பேட்டை கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்




