
பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் தடை இன்றி பள்ளிகளுக்கு சென்றுவருவதற்காக, ரூ. 3 கோடி 60 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பீட்டில் 23 பள்ளி வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இதனுடன், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் மேலும் 3 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், பழங்குடியின மக்களின் மருத்துவ தேவைகள் மற்றும் அவசரகால மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ. 5 கோடி 78 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் 25 அவசரகால மருத்துவ ஊர்திகள், மற்றும் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் வழங்கப்படவுள்ளன.
இந்த அனைத்து வாகனங்களும் — மொத்தம் 71 வாகனங்கள் — மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த சேவைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அமைச்சர், மாண்புமிகு தலைமை செயலாளர், மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




