
பண்டிகை ஒட்டி உணவு பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் அவசியம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. பண்டிகை கால இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை எஸ்எஸ்ஏஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி உணவு பொருட்களை விற்பனை செய்யும் முன் உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என்றும், பால் பொருட்களில் தயாரித்த அல்லது பால் அல்லாத பொருட்களில் தயாரித்த இனிப்புகளை தனித்தனியே பொட்டலமிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு தயாரிப்புக்கு பாக்கெட் செய்யப்பட்ட தரமான எண்ணெய் நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை குறிப்பிட்டுள்ளது. உணவு மூலப்பொருட்களை பலகை மீது மூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் மீது உணவு பாதுகாப்பு லேபல்கள் (Labels)இடம்பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் அவசியம் என்றும், பணியாளர்கள் அனைவரும் தலையுரை, கையுரை மற்றும் மேலங்கி (Must wear a hat, gloves, and a coat.)அணிந்திருக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.




