வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலூர் பகுதிகளில் இடிமினலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாம்பன் கடற்கரைக்கு அருகிலுள்ள கடலில் அரிதாக ஏற்படும் சுழல் காற்று (waterspout) நிகழ்வை மீனவர்கள் தங்கள் கண்முன்னே காண்பதாக தெரிவித்துள்ளனர்.
கருமேகங்களால் சூழப்பட்ட கடலில் சில நிமிடங்களுக்கு உருவான சுழல் காற்று, பின்னர் மறைந்து விட்டது. இந்த காட்சியை மீனவர்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி உள்ளது.
விஞ்ஞானிகள் இது பற்றி கூறுகையில் கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்ததாகவும், கடலிலிருந்து வரும் காற்று சற்றை வெப்பமாகவும் இருந்தால், இத்தகைய சுழல் காற்று நிகழ்வு ஏற்படும். பருவநிலை மாற்றத்தின் போது கடல் நீர் அதிவேகமாக மேலே உரிஞ்சி மேகமாக மாறும். வெப்பநிலை சமநிலைக்கு வந்தவுடன், சுழல் மறைந்து விடும்.
கடல் சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது, இந்த வகை சுழல் காற்று நிகழ்வுகளை கடலோர மக்கள், மீனவர்கள் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் நேரில் காண வாய்ப்பு அதிகம் உள்ளது, ஆனால் இது கடலில் அரிதாக மட்டுமே நிகழ்கிறது.






